ராஜஸ்தானில் 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக 15 மணி நேரப்போரட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.
ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல நேரப்போரட்டத்திற்கு பிறகு பிணமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தை நம்மால் மறக்க இயலாது. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜலோர் கிராமத்தில் உள்ள 4 வயது ஆண் குழந்தை, அனில் நேற்று 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து அந்த குழந்தை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலையில் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்குக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை அபாயக்கட்டத்தை கடந்துவிட்டதாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.







