திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தொடங்குகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை திருவண்ணாமலையில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றார். இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.