ஆசிரியர் தேர்வு தமிழகம்

திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம்: எல்.முருகன் ஆருடம்

திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பல்வேறு துறை சார்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும், அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எல்.முருகன், மதுரையில் பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா கலந்து கொள்ளும் கூட்டம், உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் எல்.முருகன் கூறினார். அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மதிப்பதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேட்டூர் அணை திறப்பு: 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Halley Karthik

நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடிக்கு மேல் மோசடி-மதுரையில் 2 பேர் கைது

Web Editor

தரக்குறைவாக திட்டிய நடத்துனர்; மாணவர்கள் சாலை மறியல்

EZHILARASAN D

Leave a Reply