தணிக்கை துறையின் அறிக்கையில் மின்சாரத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஊழல் நடைபெறவில்லை என்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சாரத்துறையில் ஊழல் நடந்து உள்ளதுபோல் பொய்யான கருத்துக்கள் வெளியாகி உள்ளதாக கூறினார். 2018 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகத் தணிக்கை துறை அறிக்கையில் இருப்பதாக கூறிய தங்கமணி, ஊழல் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தார்.
யூகத்தின் அடிப்படையில் தான் தணிக்கை துறை அறிக்கை தரும் என்றும், இதுகுறித்து எந்த இடத்திலும் பதில் கூறுவதற்கு தயாராக உள்ளதாகவும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.







