ஒரு ஊழல் கட்சிக்கு, இன்னொரு ஊழல் கட்சி மாற்றாக இருக்க கூடாது என மநீம தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சாவூரில் மக்கள் நீதி மையம் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஓட்டு ஒரு சுதந்திரப் போராட்டத்திற்காக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று, இன்னொரு ஊழல் கட்சி இருக்க கூடாது என்றும், இரண்டு கட்சிகளையும் களைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். நேர்மை என்பது கீழிருந்து மேலே வரக் கூடாது எனவும், தலைமை நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.







