2 மணி நேரம் 7 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் தாக்கல் செய்தார்.

2026-27-ஆம் ஆண்டுக்காண படஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை சரியாக 9:30 மணிக்கு தொடங்கியது. சபாநாய்கர் ஜே.சிடி.பிரபாகர் வருகைக்கு பின்னர் வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தவெக அரசின் முதல் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மண்வளப் பாதுகாப்பு, இல்லத்தரசி வீட்டுத்தோட்டம், வேளான் இயந்திரங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

2 மணி நேரம் 7 நிமிடங்கள் வரை அமைச்சர் வினோத்தின் வேளாண் பட்ஜெட் உரையாற்றினார்.

இதனையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நாளை காலை 9 மணிக்கு கூடும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.