“நான் திருடியதாக சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!” – அம்பிகா விளக்கம்!

தவறு செய்துவிட்டு முந்திக்கொள்வது போல் போல் நடிகை ராதா செயல்படுவதாக நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகைகல் அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் சகோதரிகள் ஆவர். இவர்களிடையே நீண்ட நாட்களாக போரூரில் உள்ள ஏ.ஆர்.எஸ் கார்டன் தொடர்பாக சொத்துத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அன்மையில் ராதா, தனது சகோதரி அம்பிகா தனது காசோலை திருடி ரூ.46 கோடி மோசடி செய்ததாக காவல்துறை அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக நடைகை அம்பிகா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுயதாவது, “ என்னுடைய சகோதரி என் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். மனதிற்கு கவலையாக இருக்கிறது. ராதா செக் கொடுத்தார் என்பது உண்மை.

சொத்து தகராறை தீர்க்க ரூ.46 கோடிக்கான காசோலைகளை வழங்கியது ராதாதான். சொத்து விஷயத்தில் மொத்தம் தர வேண்டியது 97 கோடி ரூபாய். ஏஆர்எஸ் கார்டன் நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. அது உருவாக மூலக் காரணம் நான்தான். அப்படியான அந்தப் பெயர் தற்போது அங்கு இல்லை. ஏஆர்எஸ் கார்டனில் எனது பங்கு குறித்து நீண்ட நாட்களாக எங்களுக்குள் பிரச்சினை நடந்து வருகிறது. இதுகுறித்து ராதாவிடம் பல முறை பேச முயன்றேன். எதற்குமே அவரிடம் இருந்து பதில் இல்லை. இதையடுத்து காவல்துறையிடம் புகார் கொடுத்தோம். அந்த புகாரின் விசாரணைக்கு 10 முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ராதா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இப்படி, எந்த ஒத்துழைப்பும் ராதாவிடம் இருந்து இல்லை.

என்னுடைய தங்கம் அதிகமானது ராதவிடம் இருக்கிறது. அதை கேட்டால் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தங்கம்தான் ராதாவின் வீக்னஸ். தஇரவில் தூங்கும் போது கூட அவருடைய பொருட்களை பத்திரமாக வைத்து கொள்ள கடியவர் ராதா. லாக்கரில் நம்பர் லாக் வைத்து போட கூடியவர். அந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்க கூடியவர். அவர் செக் காணவில்லை என்று சொல்கிறார்.

வீட்டில் இருக்கும் பிரச்னைகளை வீட்டிலே முடிக்க வேண்டும் என நான் நினைத்தேன். னால் ராதா அவ்வாறு செயல்படவில்லை. தவறு செய்துவிட்டு முந்திக்கொள்வதை போல் அவர் செயல்படுகிறார். நான் திருடியதாக சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; எங்கள் அம்மா நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தார். ஆகையால், சமரசம் செய்து கொள்வதற்காக பேச நினைத்தால் பேசுவோம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.