கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறையின் புதிய பிரிவு அலுவலகம் அமைக்க நடப்பாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறையின் புதிய பிரிவு அலுவலகம் அமைக்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கொல்லிமலை பகுதியில் பல்வேறு மக்கள் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகும், மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் புதிய பிரிவு அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் கடிதம் அளித்துள்ளார் என்று கூறினார்.
மேலும், சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறையில் புதிய பிரிவு அலுவலகம் அமைப்பது குறித்த கருத்துரு அரசிடம் உள்ளதாக கூறிய அவர், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நடப்பாண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.







