தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எழுதுவதற்காக பயன்படுத்திய பேனா குறித்து அரிய தகவலையும் அந்தப் பேனாவின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
சென்னை மெரினா கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா வடிவ சிற்பம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் போல் தமிழ்நாட்டின் இன்னொரு அடையாளமாக அந்த பேனா சிற்பம் மாறும் எனக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசொல்லும், சென்னை மெரினா கடற்கரை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அங்கு ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்கு தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிரம்மாண்ட நினைவிடம் அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.உதயசூரியன் வடிவில் அமைய உள்ள கருணாநிதி நினைவிடத்தில், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கலைஞரின் பேனா குறித்து நினைவைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
“அந்த பேனா! “ தலைவர் கலைஞர் அவர்கள் 1945ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து வெளிவந்த ‘தொழிலாளர் மித்திரன்’ இதழில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இது!
காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்து காணாமற் போய்விட்ட பேனா ஒன்றினைக் குறித்த கட்டுரை அது. அந்தக் கட்டுரைக்குப் பின்னர் தான் புதுச்சேரி வீதிகளில் அவர் தாக்கப்பட்டு, பின்னர் தந்தை பெரியார் அவர்களால் ஈரோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் குடி அரசு இதழில் எழுதத் தொடங்கினார்.
படத்தில் இருப்பது காணாமற் போன பேனா அல்ல; கலைஞரின் கை வாள்!
எத்தனையோ எழுத்தோவியங்களை வடித்தெடுத்த தலைவரின் கையில் இருந்த அறிவாயுதம். தலைவருடனான என் நினைவுகள் காலப் பெட்டகம் எனில் இந்தப் பேனாவோ நான் அடைந்த வாழ்நாள் பெருமை என்று அந்தப் பதிவுகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுகளை இவரை பின்தொடர்பவர்கள் லைக் செய்தும் ரீடுவீட் செய்தும் வருகின்றனர்.