முக்கியச் செய்திகள் தமிழகம்

தொழில்துறையில் தமிழ்நாட்டில் மாபெரும் மறுமலர்ச்சி- அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் சிறந்த தலைமை உள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நல்ல வளங்கள் இருந்தும் தமிழ்நாட்டினால், மகாராஷ்டிரா, ஹரியானாவைப் போல் தொழில்முதலீடுகளை ஈர்க்க முடியாதது என கேள்வி எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு பதிலளிக்கும் வகையில் தலைமைச்செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் ஒராண்டு காலத்தில் தொழிற்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வரும் 4 ஆம் தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக குறிப்பிட்ட அவர், அmந்த மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறினார். இதன் மூலம் 70,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  திமுக ஆட்சியில் இதுவரை  ரூ 94,975 கோடி மதிப்பிலான முதலீடுகளை  ஈர்த்து 2,26,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.

8 தொழில் திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளதாகவும்,  25 திட்டங்கள் திட்டமிடல் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கோவை, மதுரை மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையவுள்ளதாக கூறிய அவர், 28 உயர் நிறுவனங்கள் அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஜூலை மாதத்தில் அமெரிக்காவில்,  தொழில் முதலீட்டு மாநாடுகள் நடைபெறவுள்ளதாகவும், அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதை சுட்டிக்காட்டிய அவர்,
தொழில் நிறுவனங்கள் மூலமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

.மகத்தான சாதனைகளை கடந்த ஒராண்டில் தமிழ்நாடு செய்துள்ளதாகக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு தொழில் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவதாகக் கூறினார். எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு  மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் கூறியுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, ஹரியானாவில் அதிக முதலீடுகளுக்கு காரணம், நிறுவனங்களின் தலைமையகம் அங்கு உள்ளதான் எனக் கூறிய அவர், , உற்பத்தி அலகு வேறு மாநிலத்தில் இருந்தாலும் முதலீட்டு கணக்கின்படி மாநில தலைமையகத்தை வைத்து கணக்கிடப்படுவதாக  அளித்தார்.

சென்னையில் புதிய விமான நிலையம் குறித்து விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எந்த சவாலும் இல்லை என்றார். துறைமுகங்கள், திறன்வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அவர்  கூறினார். தமிழ்நாட்டில்  சிறந்த தலைமை உள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் கூறினார். சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே தொழில் நிறுவனங்கள் குவியாமல் எல்லா மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்படும் வகையில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram