மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் ஸ்ரீநாத்!

திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவர்கலுக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீனவர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை ரூ.6,000- யிலிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. நடப்பு ஆண்டிலிருந்து (2026-27) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6,000-யிலிருந்து ரூ.7,000- ஆக உயர்த்தி வழங்கிட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.98 இலட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.7,000- வீதம் மொத்தம் ரூ.138.75 கோடி மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர்ஸ்ரீநாத் மீனவப் பயனாளிகளுக்கு நிவாரணத்தொகை விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.

மேலும், கடல் மீனவர் மற்றும் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் கடல் மீனவர் மற்றும் மீனவ மகளிர் தங்களது பங்குத் தொகையாக மொத்தம் ரூ.1.500- செலுத்துகின்றனர். பயனாளிகள் செலுத்தும் பங்குத் தொகைக்கு இருமடங்கு ஈடாக அரசின் பங்குத் தொகையாக ரூ.3,000- சேர்த்து மீன்பிடி குறைவு காலங்களில் நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ.4,500-ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு, கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 2.08 இலட்சம் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடும் பொருட்டு, அரசின் பங்குத் தொகையாக ரூ.62.53 கோடி அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த 2.02 இலட்சம் மீனவ மகளிருக்கு நிவாரணத் தொகை வழங்கிடும் பொருட்டு, அரசின் பங்குத் தொகையாக ரூ.60.71 கோடி அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக அமைச்சர் ஸ்ரீஇநாத் திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவ மக்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் மற்றும் சிறப்பு நிவாரண உதவித் தொகைகளை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

மேலும், இவ்விழாவில் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சந்தைப்படுத்தி. சுகாதாரமான முறையில் விற்பனை செய்து. அதிக வருவாய் ஈட்டிடும் வகையில், ரூ.75,000 என்ற அலகு விலையில் பொதுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியம் மற்றும் மகளிர்/ பட்டியலிடப்பட்ட பிரிவினருக்கு 60 விழுக்காடு மானியம் என்ற அடிப்படையில் 35 மீனவர்களுக்கு குளிர்காப்பு பெட்டிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சர்ஸ்ரீநாத் வழங்கினா.

மேலும், கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிடும் பொருட்டு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவ குடும்பங்களுக்கு, சுழல் நிதியிலிருந்து தலா ரூ.2.00 இலட்சத்திற்கான விடுவிப்பு ஆணைகளையு, வழகினார். மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ரவி . மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, இயக்குநர். விஜயகார்த்திகேயன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பயனாளிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.