கோவை வ.உ.சி பூங்காவில் திராவிடர் கழகம் சார்பில் கோவையில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நூலகத்திற்கு பெரியார் அறிவுலகம் என பெயரிட்டதற்காக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடிபெற்றது.
இவ்விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
“திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகளுக்கான பாராட்டாக இகோவையின் புதிய அடையாளமாகக் கம்பீரமாக நிற்கிறது “பெரியார் அறிவுலகம். பெரியார் அறிவுலகம்” கோவையின் அடையாளம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அடையாளம். இதற்காக அமைச்சர், அதிகாரிகளுடன் பலமுறை ஆய்வு செய்து, 99% பணிகள் வெற்றிகரமாக முடிந்த நிலையிலும் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்டேன். திராவிட மாடல் ஆட்சியில் பல சாதனைகளைச் செய்துள்ளோம். ஆனால், பெரும் சாதனையாக விளங்குவது பெரியார் அறிவுலகம்தான். நன்றிக்காகவோ, பாராட்டிற்காகவோ பெரியார் அறிவுலகத்தைக் கட்டவில்லை. தமிழ்நாட்டின் அறிவாலயமாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்தோம். உலகமே டிஜிட்டல் மயமாகும் நிலையில் நூலகம் எதற்கு எனக் கேட்டார்கள். வெறும் புத்தகங்களுடன் மட்டுமல்லாமல், டிஜிட்டல் நவீன நூலகமாக அதை வடிவமைத்தோம். சென்னையில் அண்ணா பெயரில் நூலகம் உள்ளது. அதேபோல், மதுரையில் கலைஞர் பெயரிலும், கோவையில் பெரியார் பெயரிலும், திருச்சியில் காமராஜர் பெயரிலும் நூலகம் அமைக்க வேண்டும் எனக் கூறினேன். சொன்னதைச் செய்து காட்டியிருக்கிறேன்.
ஜோதிடர் சொன்ன தேதியில்
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் தவெக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெல்லை, கடலூர், சேலம் நூலகத் திட்டங்களை ரத்து செய்யாமல், பணிகளை விரைவாக முடித்துத் திறந்து வைக்க வேண்டும். பெரியார் அறிவுலகம் தொடக்கநிலைத் திட்டமாக இருந்திருந்தால், அதற்கு மூடுவிழா நடத்தியிருப்பார்கள். 95% பணிகள் முடிவடைந்திருந்ததால், பேருக்கு ஜோதிடர் சொன்ன தேதியில் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார்.
முதல்வருக்கு பின்னால் கார்ப்பரேட் பவர் சென்டர்
சட்டம்-ஓழுங்கு பற்றி கேள்வி கேட்டால் ஃபையிலை திறப்பேன் என்று சொல்கிறார். ஆனால் ஃபைலை திறக்கவில்லை ஜெயிலை தான் திறந்து விட்டிருக்கிறார். 30 வருட வரலாற்றில் இத்தனை கைதிகள் சிறையில் இருந்து தப்பித்த வரலாறி இந்த கேவலமான ஆட்சியையே சேரும்
தமிழ்நாட்டில் ஆளும் கட்சி செய்வது Healthy politics இல்லை filthy politics!இளைஞர்களும் இளம் பெண்களும் அதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். பவர் சென்டரே இருக்காது என்று விஜய் சொன்னார். ஆனால், இன்று நிலைமை என்ன? முதல்வரை டம்மியாக்கிவிட்டு, அவருக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்கள்தான் ஆட்சி செய்கின்றன. முதல்வரை வைத்து சர்க்கஸ் ஆட்சி நடத்துகிறார்கள். விஜய் ஆட்சிக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டவர்களே, போதும் என்ற நினைப்புக்கு வந்துவிட்டார்கள்.
தவெக ஆட்சியில் செயற்கையாக மின்வெட்டு
தவெக ஆட்சியால் மின்வெட்டுப் பிரச்சினையைச் சரிசெய்ய முடியவில்லை. துணைக் குடியரசுத் தலைவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும்போது மின்வெட்டு ஏற்படுகிறது. கேட்டால், ஜெனரேட்டரில்தான் மின்விநியோகம் செய்கிறோம் எனத் துறை அமைச்சர் ஒப்புக்கொள்கிறார். அடுத்த நாளே பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இது என்ன கோமாளித்தனம்?. தவெக ஆட்சியில் செயற்கையாக மின்வெட்டு உருவாக்கப்படுவது ஏன்? திமுக ஆட்சியில் குறைந்த விலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, இரண்டு மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். மின்வெட்டு ஒருபுறம் என்றால், மறுபுறம் அறிவாள் வெட்டு வெற்றி நடைபோடுகிறது.
தவெகவினரே குற்றவாளிகளாக…
தலைநகர் தொடங்கி, மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் சர்வசாதாரணமாகக் கொலைகள் அரங்கேறியுள்ளன. தொழில் நகரமாக இருந்த கோவையில், ஒரு மாதத்தில் 10 கொலைகள் அரங்கேறியுள்ளன. மூச்சுக்கு மூச்சு தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால், இன்று எப்படியெல்லாம் துர்நாற்றம் வீசுகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. தவெகவினரே போதைப் பொருட்களை உற்பத்தி செய்து பதுக்கி வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் நடக்கின்றன. அதிலும் தவெகவினரே குற்றவாளிகளாக இருக்கிறார்கள். இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி என்பது போல், தவெகவில் பா*யல் , போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும் தனி அணி உருவாக்க வேண்டும்.
குற்றவாளிகளைப் பிடிக்கத்தான் வக்கில்லை என்றால், சிறைக் கைதிகளையும் பாதுகாக்க வக்கில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பித்துள்ளார்கள். கோவையில் தப்பித்த குற்றவாளி மீண்டும் தப்பித்துள்ளார். தொடர்ச்சியாகக் குற்றவாளிகள் தப்பித்துச் செல்லும் வரலாற்றுச் சாதனை தவெக ஆட்சியில்தான் நடந்திருக்கிறது.
வெற்றி தமிழகம் எனப் பீலா விடுகிறார்கள்
திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் டாப்பில் இருந்தது தமிழ்நாடு. ஆனால், 5 மாதங்களில் தரைமட்டத்திற்குப் போய்விட்டது. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய அவமானத்தை 5 மாதங்களில் அடைந்துவிட்டு, வெட்கமே இல்லாமல் ‘வெற்றி தமிழகம்’ எனப் பீலா விடுகிறார்கள். இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் பாதாளத்திற்குப் போய்விட்டது. எல்லோருடைய வயிற்றிலும் அடித்து, வயிற்றெரிச்சலைச் சம்பாதித்துள்ளார்கள்.
முதலமைச்சர் பதவி என்பது 10–5 அலுவலக வேலை அல்ல
ஜோதிடர் சொன்னபடி பட்டுவேஷ்டி, கோட் சூட் அணிகிறார்; புழல் சிறைக்குச் சென்று பரிகார பூஜை செய்கிறார். திமுக அரசின் திட்டங்களைத் திறந்து வைத்து, ஷோ காட்டுகிறார்கள். 10–5 ஆபீஸ் டைம் போல சிம் செல்கிறார். சனி, ஞாயிறு விடுமுறை என வீட்டில் இருக்கிறார். முதலமைச்சர் விஜய் அவர்களே, முதலமைச்சர் பதவி என்பது 10–5 அலுவலக வேலை அல்ல. சினிமா கால்ஷீட் போலச் செயல்படாமல், மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்ற வேண்டும்.” இவ்வாறு அதில்




