அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனு தாக்கல்!

மதுரையில் நான்கு தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகள் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம்…

மதுரையில் நான்கு தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகள் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் அளிக்கப்படும் என நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.

அதையடுத்து மதுரையில் நான்கு தொகுதிகளில் விருப்ப மனுவை அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்பு கூட்டுறவு வங்கி, நகை கடன் ரத்து தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் என்றார்.

அமமுக- அதிமுக இணைப்பு தொடர்பாக தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படும் தொண்டனாக இருப்பேன் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவத்தார். என் தொகுதியை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றவில்லை, நான்கு தொகுதிகளுக்கும் சிறப்பான திட்டங்களை செய்து உள்ளேன்,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.