நகைக்கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு!

கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த வாரம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் வரை நகை…

கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த வாரம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் வரை நகை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனவரி 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் விவரங்களை அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.