அதிமுக அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள் வெற்று அறிக்கையே: வேல்முருகன்

திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு இரண்டு நாட்களில் அதிகார பூர்வ அழைப்பு வரும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத்  தலைவர் …

திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு இரண்டு நாட்களில் அதிகார பூர்வ அழைப்பு வரும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத்  தலைவர்  கே.பாலு நேற்றிரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று சேலம் வந்த வேல்முருகன், அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நிதியே ஒதுக்காமல், அதிமுக அரசு அறிவித்துள்ள விவசாய கடன், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெறும் வெற்று அறிவிப்புகள் என்றார்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.