தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் செலவில் வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செயவ்வதற்காக இந்து சமய அறநிலைய்ததுறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கோயிலுக்கு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பெருமாள் கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும், கல் மண்டப கட்டுமான பணிகளையும், ஐந்து கோடி ரூபாய் செலவில் புது ராஜகோபுரம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். கல் மண்டபத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் உயிரோட்டத்துடன் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என சிற்ப கலைஞர்களுக்கு அறிவுறுத்தினர்.