டி.என்.பி.எல் டி-20 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களில் சுருண்டது.
அந்த அணியில் அதிகபட்சமாக மணி பாரதி 26 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 15 ஓவரிலேயே இலக்கை எட்டியது.







