முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது: அமைச்சர்

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி, நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடரும் 4 ஆண்டுகளும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடரும்” என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு தொடர்பாகவும் விமர்சனம் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.“இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது” என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், “கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கக் கூடாது என பேசிய அண்ணாமலை, தற்போது தமிழக பாஜக தலைவர். இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர அனுமதி இல்லை – மத்திய அரசு

Web Editor

தமிழ்நாட்டில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று

G SaravanaKumar

ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை

Halley Karthik