பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
புனேவில் நடைபெறும் ஆண்களுக்கான பதினோறாவது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு ஹாக்கி அணியை வழியனுப்பும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று, ஹாக்கி வீரர்களை வாழ்த்தி, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து வருகின்ற 11 ம் தேதி புனைவின் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் பங்கேற்ற செல்லும் வீரர்களுக்கு வாழ்துகள் தெரிவிப்பதாகவும், இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. பூனே செல்லும் 18 பேரும் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உலக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிலம்பப் போட்டிகளை பள்ளி அளவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
243 சட்டமன்ற தொகுதிகளில் விளையாட்டு , 25 தொகுதிகளில் மட்டுமே நவீன உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. மீதம் உள்ள 209 தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டவுடன் 3 கோடி ரூபாய் செலவில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளால அதிமுக ஆட்சியில் அண்ணா விளையாட்டு மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை. இந்த திட்டத்தை மீண்டும் மேம்படுத்தி கிராமபுற வீளையாட்டு வீரர்கள் பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.







