முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் வவ்வாலாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம்

கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ பிறப்பார்கள் என மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் கிராமத்தில் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னின்று நடத்திய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்ந்து ஆன்மீக உரையாற்றினார்.

தேசிய கொடி ஒரு சைவ கொடி எனவும் இதில் இடம்பெற்றுள்ள பச்சை நிறம் அம்பாளையும். சிவப்பு நிறம் செம்மேனி அம்மாளின் நிறத்தையும், வெள்ளை நிறம் ரிஷபத்தை குறிக்கிறது என்றும் கூறினார்.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள், அவற்றை கொடுத்துவிடும் படி அறிவுறுத்திய அவர், தவறினால், அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ பிறக்க நேரிடும் எனக்கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

என்னாச்சு? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

Halley Karthik

இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

Jayapriya

திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்

Halley Karthik