ஒமிக்ரான் வைரஸ் உறுதியானால் அரசே தெரிவிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதற்காக சென்னையில் ஓமந்தூரர், ராஜீவ்காந்தி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனைகளிலும், திருச்சி, கோவை அரசு மருத்துவமனைககளிலும் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மரபணு ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வும் கூறினார்.
ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் அரசே நேரடியாக தெரிவிக்கும் என்றும், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.








