முக்கியச் செய்திகள் விளையாட்டு

கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்றுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. இதில் இந்திய அணி, வெற்றி பெற வேண்டிய நிலையில் நியூசிலாந்து அணி போராடி, டிரா செய்தது. 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மும்பையில் இன்று நடக்கிறது. கான்பூர் டெஸ்ட் போட்டியின் போது, அறிமுக வீரராக இடம் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.

இந்நிலையில், காயம் காரணமாக, இந்திய வீரர்கள் ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, வான்கடே மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 11.30 மணிக்கு போடப்பட்ட டாஸை வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்லும் ஆடி வருகின்றனர்.

இந்திய அணி:
விராத் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், சிராஜ்

நியூசிலாந்து அணி:
டாம் லாதம் (கேப்டன்), வில் யங், டேரில் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோலஸ், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, ஜேமீசன், டிம் சவுதி, வில்லியம் சோமர்வில்லே, அஜாஸ் படேல்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’மனைவியாக ஏற்க முடியாது’ என்றதால் உயிரிழப்பு : பிரபல நடிகரின் மகன் கைது!

Halley Karthik

தேசத் துரோக வழக்குப் பதிய இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

Halley Karthik

காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

EZHILARASAN D