மதுரையில் குழந்தைகள் நல மருத்துவமனை – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி. மூர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய…

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி. மூர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். தமிழ்நாட்டில் சென்னை எழும்பூரில் மட்டுமே தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பன்னோக்கு மருத்துவமனை உள்ளது.

இதனால் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையிலும் குழந்தைகள் நல பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது, இதில் குழந்தைகளுக்கான புற நோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, அதிதீவிர சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சைப்பிரிவு உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவுள்ளது. 120 கோடி ரூபாயில் அமைக்கப்படும் இந்த மருத்துவமனைக்கு முதற்கட்டமாக 20 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.