முக்கியச் செய்திகள் தமிழகம்

துப்பாக்கிச் சுடும் போட்டியை விளையாட்டு பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் தகவல்

துப்பாக்கிச் சுடும் போட்டியை மாநில விளையாட்டு பட்டியலில் கொண்டுவர நட வடிக்கை எடுக்கப்படும் என மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு ரைபிள் கிளப் சார்பாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 5 தினங்களாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 140 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் . பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இறுதிப்போட்டி நிறைவடைந்தது.

பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த பரிசளிப்பு விழாவில் மாநில செய்தித் துறை அமைச் சர் மு.பெ. சாமிநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி னார். துப்பாக்கி சுடுவது குறித்து ஆர்வமாகக் கேட்டறிந்து தானும் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்தார்..

பின்னர் பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ள துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு மாநில விளையாட்டு பட்டியலில் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும் விரை வில் மாநிலப் பட்டியலில் கொண்டுவர தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் கலந்து கொண் டனர். இதில் புதுக்கோட்டை ரைப்பிள் கிளப் அணியினர் ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றனர்.

Advertisement:
SHARE

Related posts

ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் என்னென்ன?

Gayathri Venkatesan

‘மின்னும் மன்னை’ திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி தரவேண்டும்: டிஆர்பி ராஜா

வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்; உடனடியாக திருப்பி அனுப்ப சீனா கோரிக்கை!

Saravana