முக்கியச் செய்திகள் தமிழகம்

காவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு

காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் , பாதாள சாக்கடை திட்டங்கள் என 72 திட்டங்கள் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார் பொறுத்தப்பட்ட இணைப்பைக் கண்டறிந்து துண்டிக்க அதிகாரிகளுக்கு அறிவுருத்தினார்.

மேலும் காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

Ezhilarasan

கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Ezhilarasan

இரவு நேர கேளிக்கை விடுதியாக மாறிய கார்… டாக்ஸி டிரைவரின் புதிய முயற்சி!

Jayapriya