முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் காரணமாக தற்கொலை செய்த மாணவரின் பெற்றோருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் பெற் றோரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் தேர்ச்சி பெறாத நிலையில், மூன்றாவது முறையாக இன்று நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்பதற்கு தயாராகி வந்தார். அதேநேரம், தனுஷ் நீட் தேர்வு குறித்த அச்சத்தில் இருந்ததாக கூறப் படுகிறது. இந்த சூழலில் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சி தலை வர் எடப்பாடி பழனிசாமி, மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரு டன் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்ட மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement:
SHARE

Related posts

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

Jayapriya

தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: கே.பாலகிருஷ்ணன்

Jayapriya

இணையத் தொடராக தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’

Halley Karthik