சுங்கச்சாவடிகளை அகற்ற அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தியதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய…

தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தியதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேற்றிரவு சந்தித்த, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநிலத்தில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

இதுபற்றி இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு-திண்டிவனம் சாலை உள்ளிட்ட 10 திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசியதாக தெரிவித்தார். மேலும் தாம்பரம் – பரனூர், மதுரவாயில் – ஸ்ரீபெரும்புதூர் இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டிற்கான சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்தாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.