ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அறிவியல் பயிற்சி வழங்க உள்ளதாக கூறினார். கொரோனா தொற்றைக் காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மாணவர்களின் உடல்நிலை பாதிக்காத வகையில் தான் அரசு முடிவு எடுத்து வருவதாக கூறிய அவர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து தெரிவிக்கப்படும் என்றார். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியது அவசியமில்லை, அரசு பள்ளிகள் திறந்திருக்கும், வரவேண்டியவர்கள் வரலாம் என்றும் அன்பில் மகேஸ் கூறினார்.