முக்கியச் செய்திகள் தமிழகம்

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என கூறியுள்ளது.

தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழையும், நாளை மறுநாள் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குலாப் புயல், இன்று மாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது, சுமார் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

2500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!

Saravana

தொடர்ந்து குறைகிறது.. தமிழகத்தில் புதிதாக 24,405 பேருக்கு கொரோனா தொற்று!

Halley karthi

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

Gayathri Venkatesan