முக்கியச் செய்திகள் தமிழகம்

கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஆறு மாதமாக நடைபெற்று வரும் இந்த பணியில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள், வடிகட்டும் குழாய், செங்கல் கட்டுமான அமைப்புகள் என ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை, துறைமுகமாகவும், குதிரை ஏற்றுமதி இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக குதிரை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதே போல், பெண்ணின் சுடுமண் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொருட்கள் வரலாற்றை தொடர்ந்து வெளியில் காட்டிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நாளை ஆலோசனை

Web Editor

124 வது மலர் கண்காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

G SaravanaKumar

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

Gayathri Venkatesan