நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி கழிவறையின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், விபத்து நடந்த பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை பகுதியில் பாழடைந்த மாநகராட்சி பள்ளி கட்டடம் இடித்து அகற்றப்படுவதையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்.