முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பெண் குழந்தையை தீ வைத்து கொல்ல முயன்ற தந்தை: நெல்லை அருகே கொடூரம்

பத்து வயது பெண் குழந்தையை, தந்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர்.

காவல்கிணறு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், அந்தோணி ராஜ் மற்றும் சுஜா வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குழந்தை அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகேஸ்வரி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று ஆத்திர மடைந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அலறித் துடித்த மகேஸ்வரி, தன்னை காப்பாற்றும்படி தந்தை அந்தோணி ராஜை கட்டி பிடித்துள்ளார்.

இதனிடையே சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 வயது சிறுமியை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Halley Karthik

’எச்சரிக்கையா இருங்க’: கொரோனா பரிசோதனைக்கு போலி இணையதளம்!

Vandhana

எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறு பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Saravana