முக்கியச் செய்திகள் விளையாட்டு

கோலி விவகாரத்தை தேர்வு குழு கையாண்ட விதம் தவறானது; வெங்சர்க்கார்

கோலி விவகாரத்தை தேர்வு குழு கையாண்ட வழிமுறை தவறானது என முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கர் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்னர் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு ரோகித் சர்மா 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தான் கோலியிடம் 20 ஓவர் போஒட்டியில் இருந்து விலக வேண்டாம் என தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக கூறினார்.

ஆனால், விராட் கோலி இதற்கு எதிர்மறையாக தன்னிடம் யாரும் தனிப்பட்ட முறையில் இதுகுறித்து பேசவில்லை என தெரிவித்தார். இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்குள் ஏதோ பிரச்னை இருப்பது வெளி உலகிற்கு தெரிய வந்தது. மேலும்,  இதுகுறித்து சரியான விலக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கர், கங்குலியை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர், கேப்டனை தேர்வு செய்வதும், நீக்குவதும் தேர்வு குழுவின் வேலை, இதில் கருத்து தெரிவிக்கும் வரம்பு கங்குலிக்கு கிடையாது என தெரிவித்தார். மேலும், விராட் கோலி விவகாரத்தில் தேர்வு குழு கையாண்ட வழிமுறை மிகவும் தவறானது. கோலி இந்திய அணிக்காக பல ஆட்டங்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி தந்துள்ளார். அதனால், இந்த விவகாரத்தை சிறப்பான முறையில் கையாண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

Ezhilarasan

கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை

Ezhilarasan

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

Arivazhagan CM