தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, தமிழ்நாட்டில் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு.
பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதைத் தடுக்க கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், இடைவெளியின் போது மாணவர் கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவித்தார்.








