வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அதிமுக – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்…

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அவருக்கு பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக சிகாமணி நகர் பகுதியில் அமைந்துள்ள கோயில் முன்பு புறாக்களைப் பறக்க விட்டு பரப்புரையில் கடம்பூர் ராஜூ ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து தனது சுயநலத்திற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக எனக் குறிப்பிட்ட அவர், திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து தனது சுயநலத்திற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.