திருவாரூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் அடிப்படை வாழ்வாதாரம் தேடி வருகின்றனர். மிகவும் குறைந்த கூலிக்கு இவர்கள் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் மிகவும் வசதி குறைந்த, தங்க முடியாத இடங்களில் வசிக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் காரைக்காட்டு தெருவில் உள்ள புதிய குடியிருப்பு கட்டிடத்தில் பாட்னா மாநிலம் ராஜ்கபூர் மாவட்டத்தை சேர்ந்த அஜய்ராய் என்பவர் கட்டிடத்திலேயே தங்கி டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்த நிலையில் இன்று மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.







