தடுப்பூசிதான் மனித சமுதாயத்தின் பெரும் நம்பிக்கை: பிரதமர் நரேந்திரமோடி

பெருந்தொற்றில் இருந்து வெற்றிகரமாக விடுபட தடுப்பூசி மனித சமுதாயத்துக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். கோவின் என்ற மொபைல் செயலியை பெற 50 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதையடுத்து கோவின்…

பெருந்தொற்றில் இருந்து வெற்றிகரமாக விடுபட தடுப்பூசி மனித சமுதாயத்துக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கோவின் என்ற மொபைல் செயலியை பெற 50 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதையடுத்து கோவின் குளோபல் என்ற மாநாட்டில் காணொலி வழியே உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

“பெருந்தொற்றின் காரணமாக அனைத்து நாடுகளிலும் உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் இது போன்று வேறு எந்த ஒரு பெருந்தொற்றும் இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எந்த ஒரு நாடும், அந்த நாடு எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்த ஒன்று எனினும் கூட, இது போன்ற பெருந்தொற்றுக்கு எதிராக தன்னந்தனியாக தீர்வு காணமுடியவில்லை என்பதை அனுபவம் வெளிப்படுத்துகிறது.

கொரோனா தொற்றுக்கு எதிரான நமது போரில் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, எந்த வித வளத்தடைகளும் இன்றி, மென்பொருள் ஒரு பகுதியாக இருக்கிறது. இதனால்தான் கோவிட் தேடுதல்& கண்டறிதல் எனும் திறந்தவெளி செயலியை தொழில்நுட்ப ரீதியாக உருவாக்குவது மிகவிரைவில் சாத்தியமானது.

பெருந்தொற்றில் இருந்து வெற்றிகரமாக விடுபட தடுப்பூசி மனித சமுதாயத்துக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே, நமது தடுப்பூசி நடவடிக்கைகளை திட்டமிடும்போது முழுவதுமாக டிஜிட்டல் வழிமுறைகளைக் கடைபிடித்து வருகின்றோம்.”
இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.