மிக்ஜாம் புயல் : வீட்டிற்குள் புகுந்த மழைநீர் – 2 குழந்தைகள் உட்பட 15 பேர் மீட்பு!

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பேரிடர் குழுவினரால் மீட்கப்பட்டனர். தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மிக்ஜாம் புயல் தற்சமயம் கரையை கடந்து கொண்டிருக்கிறது.  இதன்…

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பேரிடர் குழுவினரால் மீட்கப்பட்டனர்.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மிக்ஜாம் புயல் தற்சமயம் கரையை கடந்து
கொண்டிருக்கிறது.  இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.  தொடர்ந்து தாம்பரம் பகுதியில் 25 நபர்கள் கொண்ட பேரிடர் மீட்பு குழு முகாமிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:  இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும் மிக்ஜாம்! -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

இந்த நிலையில் பெருங்களத்தூர் பீர்கான் காரனை பகுதியில் நீரின் அளவு
அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.  இதனால் வீட்டிற்குள்
இருப்பவர்கள் தாம்பரம் மாநகராட்சி தகவல் மையத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.

இதனைத் தொடர்ந்து  2 குழந்தைகள் 11 பெண்கள் உட்பட 15 நபர்கள் மீட்பு குழுவினரால்
மீட்கப்பட்டுள்ளனர்.  அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். மீட்பு குழுவினருடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.