முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ’ரி யூனியன்’ – சந்தித்த காதலர்கள் தலைமறைவு!

35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ’ரி யூனியன்’ நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட மாணவரும்  மாணவியும் தலைமறைவாகியுள்ளனர்.

கேராளாவில்  எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களும் மாணவிகளும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும் இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்கள் இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவருக்கும் அவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இருவரும் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

அண்மைச் செய்தி : ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்? – பாலிவுட் மேக்கப் கலைஞரின் சர்ச்சை பேச்சு

இந்த நிலையில் வகுப்பு தோழர்கள் சேர்ந்து பள்ளியில் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் எர்ணாகுளம் மாணவரும் இடுக்கி மாணவியும் கலந்து கொண்டனர். 50 வயதை நெருங்கி விட்ட வகுப்பு தோழர்கள் அணைவரும் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்தித்துக் கொண்டனர். இந்த ’ரி யூனியன்’ நிகழ்ச்சியின் முடிந்த போது இருவரும் பள்ளியில் இருந்து தலைமறைவாகியுள்ளனர்.

’ரி யூனியன்’ நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கட்டைப்பையில் மறைத்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டி பிடித்த போலீஸ்

Web Editor

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்-வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை

Web Editor

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்

Web Editor