ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது.
ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே மூன்று டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. கோலி, கில் சதமடித்து அசத்தியிருந்தனர். ஐந்தாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
அந்த அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் வெற்றி தோல்வி இல்லாமல் சமனில் முடிந்தது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தொடர்ந்து 4வது முறை கைப்பற்றியுள்ளது.
இதையும் படிக்க: எலிகள் மூலம் புதிய வகை கொரோனா? – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
விராட் கோலி 4வது போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர். தொடரை வென்றதன் மூலமும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றதன் மூலமும் இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வருகிற ஜூன் 7ம் தேதி ஓவர் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோத உள்ளன.
-ம.பவித்ரா








