இந்தியாவில் மட்டுமே விருதுகளை வாங்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது ஆஸ்கர் விருது கூட வாங்கலாம் என பாலிவுட் மேக்கப் கலைஞரான ஷான் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
95வது அகாடமி விருதுகளில் RRR பாடலான நாட்டு நாட்டு வெற்றி இந்தியா முழுவதும் உள்ள அனைவராலும் கொண்டாடப்படுகிறது. மேக்கப் கலைஞரான ஷான் முட்டாத்தில்,‘பணத்தை வைத்து விருதை வாங்கியதாக சூசகமாக கூறியதால் சர்சை எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று நடைபெற்ற ஆஸ்கார் விருது குறித்து அவர் பதிவிட்ட கருத்தில் “ஹாஹா இது மிகவும் வேடிக்கையானது. . நம்மிடம் பணம் இருக்கும்போது எதைப் பெற முடியும். ஆஸ்கார் விருதுகள் கூட,” என்று அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார்.
இந்த கருத்துக்கள் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்களில் பலர் முத்தத்திலிடம் ‘யாரும் கவலைப்படவில்லை’ என்று கூறினார். அவரது கருத்தின் ஸ்கிரீன் ஷாட் ஆன்லைனில் பகிரப்பட்ட பிறகு, அவரது நண்பர் ஜாக்குலினின் பாடல் விருதை வெல்லாததால் அவர் ‘பொறாமையாக’ செயல்படுவதாக பலர் தெரிவித்தனர்.
ஆஸ்கர் விருதை வென்றதற்காக RRR படக்குழுவினரைத் திரைப் பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் நிலையில் RRR படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜெய் ஹிந்த்’ என ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.