மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லா பிரதமர் மோடியுடன் சந்திப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திப்பதற்காக…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திப்பதற்காக இந்தியா வந்திருந்தார். இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் மாற்றத்தில் உள்ள சில குறைபாடுகள், அதன் பாதுகாப்பு தன்மை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு சத்யா நாதெல்லா அவரது ட்விட்டர் பதிவில், இந்த சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி.

https://twitter.com/satyanadella/status/1610860042219290629

 

டிஜிட்டல் மாற்றத்தால் வழிநடத்தப்படும் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கங்கள் ஆழ்ந்த கவனம் செலுத்துவதைக் காண ஊக்கமளிக்கிறது. மேலும் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பில் முழுமையான டிஜிட்டல் இந்தியாவாக மாறுவதில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா கடந்த 2021ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.