திருமகன் ஈவெரா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

திருமகன் ஈவெரா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  இரங்கல் தெரிவித்தனர்.  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் என்ற இருமகன்கள் உள்ளனர். இதில்…

திருமகன் ஈவெரா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  இரங்கல் தெரிவித்தனர். 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் என்ற இருமகன்கள் உள்ளனர். இதில் திருமகன் ஈவெரா தனது தந்தையை போல அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியில் துடிப்புடன் செயலாற்றி வந்த திருமகன் ஈவெராவுக்கு நேற்று காலை திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி திருமகன் ஈவெராவின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமகன் ஈவெரா மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரசு மூத்த தலைவர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் மயானத்திற்கு கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றபட்டு செல்ல தயாராக உள்ளன.வாகனத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவரது தாயார்,மனைவி, மகள், தம்பி ஆகியோர் உடன் சென்றனர். கருங்கல்பாளையம் காவேரி கரை மின் மயானத்திற்கு ஆர்கேவி சாலையில் கருங்கல்பாளையம்  வழியாக அவரது உடல் கொண்டு செல்லபடுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.