முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

’கிரிக்கெட் வீரர் கன்னத்தில் அறைந்த காதலி’ – வைரலான வீடியோ

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் கன்னத்தில் அவரது காதலி அறைந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தில் விடுமுறை தினத்தன்று நூசாவில் உள்ள ஒரு உணவகத்தில் மைக்கேல் கிளார்க், அவரது காதலி டேஜ் யார்ப்ரோ மற்றும் ஜேட் யார்ப்ரோவின் சகோதரி ஜாஸ்மின் ஆகியோர் இருந்தனர். அப்போது கிளார்க்குக்கும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு உணவகத்தில் வெளியே கிளார்க்கின் கன்னத்தில் ஜேட் யார்ப்ரோ அறையும் காட்சி பதிவாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வீடியோவில் ஜேட் யார்ப்ரோ, என்னை ஏமாற்றிவிட்டாய் என்று கிளார்க்கிடம் கூறுகிறார். மேலும், கிளார்க்கின் முன்னாள் காதலி குறித்து ஜேட் யார்ப்ரோ பேசுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில், “ இந்த மோதலுக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது செயல்களால் நான் மனமுடைந்துவிட்டேன்” எனக் கூறினார்.

இந்த சம்பவத்தால் வரவிருக்கக்கூடிய இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான வர்ணனை ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடர் வரும் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. நூசாவில் நடைபெற்ற சம்பவத்துக்காக மைக்கேல் கிளார்க்குக்கும் அவரது காதலிக்கும் குயின்ஸ்லாந்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சட்டமன்ற தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இன்று முக்கிய ஆலோசனை!

Saravana

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!

Dhamotharan

குடியரசு தினவிழா கொண்டாட்டம்; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

Yuthi