தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 109வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.
தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







