மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!

மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மூன்று உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் தனியார் அறக்கட்டளை மற்றும் வாடகை…

மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மூன்று உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் தனியார் அறக்கட்டளை மற்றும் வாடகை ஆம்புலன்ஸ்கள் என 20க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்படும் ஆம்புலன்ஸ்களுக்கு உரிய உரிமம் இல்லை என புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரின் பேரில் போலீசார் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் ஸ்டேண்டுகளில் சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையம் போலீசார்மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மூன்று வாகனங்களுக்கு உரிமம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிலர் சோதனைக்கு அதிகாரிகள் வருவதை அறிந்து வாகனங்களை எடுத்து கொண்டு தப்பினர். இந்த சோதனையில் உரிய உரிமம் மற்றும் எப். சி பெறாத மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரெ. வீரம்மாதேவி 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.