டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ திரைப்படம் 7-வது நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பை ஆக்ஷன் ‘மிஷன் இம்பாசிபிள் 7’:
மிஷன் இம்பாசிபிள் 7 சிறந்த ஆக்ஷன் காட்சிகள், டாம் குரூஸ், இணை நடிகர் ஹெய்லி அட்வெல் மற்றும் பிற நட்சத்திரங்களின் சிறந்த நடிப்பிற்காகவும் பாராட்டப்படுகளை குவித்து வருகிறது. மேலும், ரெபேக்கா பெர்குசன் இப்படத்தில் இல்சா ஃபாஸ்டாக தோன்றியுள்ளார். ரெபேக்காவின் ஆக்ஷன் காட்சிகளும் அற்புதம். கேப்ரியல் என்ற வில்லன் பாத்திரத்தில் ஈசாய் மோரல்ஸ் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த படம் 12 ஜூலை 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியான உடனேயே பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
‘மிஷன் இம்பாசிபிள் 7’ படம் முதல் நாளில் அமோகமாக வசூல் செய்த நிலையில் தற்போது படத்தின் 7வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் வந்துள்ளது. இப்படம் 7வது நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
மிஷன் இம்பாசிபிள் 7 வசூல் :
டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ திரைப்படம் 7-வது நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ரூ72.85 கோடி வசூல் செய்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் வசூல் ரீதியாக இப்படம் 1000 கோடியை தாண்டியுள்ளது.







