மெட்ரோ ரயில் பணி – அடையாறில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் இன்று முதல் (பிப்.18) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; சென்னை மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகள் அடையார்…

மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் இன்று முதல் (பிப்.18) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;

சென்னை மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு இந்திரா நகரில். பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 18.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

OMR நோக்கி செல்லும் வாகனங்கள் :
MG சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2வது அவென்யூ வழியாக OMR
நோக்கி வரும் வாகனங்கள் திருப்பப்பட்டு 2வது அவென்யூ, 3வது பிரதான சாலை,  21வது குறுக்குத் தெரு, இந்திரா நகர் 3வது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவிலிருந்து OMR நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். அதுபோல கஸ்தூரி பாய் நகரிலிருந்து OMR நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம் போல் செல்லலாம்.

LB ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் :
OMR இலிருந்து 2வது அவென்யூ வழியாக LB சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு மாறாக 2வது அவென்யூ, 3வது பிரதான சாலை, இந்திரா நகர் 1வது பிரதான சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவிலிருந்து இந்திரா நகர் 3வது அவென்யூ வழியாக எல்பி ரோடு நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4வது அவென்யூ, 3வது பிரதான சாலை, இந்திரா நகர் 2வது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கஸ்தூரி பாய் நோக்கி செல்லும் வாகனங்கள்:
OMR மற்றும் கலாக்ஷேத்ராவிலிருந்து கஸ்தூரி பாய் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.