முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனா தொற்றில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், தமிழகம் முதலிடத்தை தொட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், “கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் முதலிடத்திலும் கேரளா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 33 ஆயிரத்து 59 பேருக்கும் கேரளாவில் 31 ஆயிரத்து 337 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் பதிவாகும் தினசரி கொரோனா தொற்றில் 74 சதவிகிதம் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளையில், நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு விகிதம், 13.31 சதவீதம் ஆக சரிந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக, மூன்று லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

Ezhilarasan

முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

Karthick

புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!

Karthick