டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் சி.ஹரி சங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனைவியின் சம்மதமின்றி கணவன் உடலுறவு கொள்வதைத் தடைவிதிப்பது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ‘marriage strike’ என்ற ஹேஸ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் படி மனைவியின் சம்மதமின்றி கணவன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமில்லை. இப்படி பலாத்காரமாக உறவு கொள்ளும் ஆண்களின் மேல் பலாத்காரச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற சூழலே நிலவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் சி.ஹரி சங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இது தொடர்பான மனுக்களை தற்போது விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இது சம்மந்தமாக கருத்து சொன்ன பெண்கள் கூட்டமைப்பு “ குடும்பப் பெண்களை ஆண்கள் பாலியல் ரீதியாக துன்பப்படுவத்தினால் அந்த ஆண்களின் மேல் பலாத்கார குற்றம் சுமத்த முடியாது. திருமணத்திற்குப் பின் பெண்களின் கருத்துக்கள் குறைத்து மதிப்பிடப்படுகின்றது, என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.
பெண்கள் கூட்டமைப்பிற்கான இந்த கருத்திற்கு டிவிட்டரில் எதிர்ப்பு வழுத்து வருகிறது. “ஆண்கள் எப்போதும் இரண்டாம் குடிமகன்களாக பார்க்கப்படுகிறார்கள், ஆண்களைப் பாதுகாப்பதற்கென்று சட்டங்கள் எதுவுமில்லை. இந்தியப் பெண்கள் தங்களுக்கான சட்டங்களை ஆண்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள், முதலில் ஆண்களுக்கான அடிப்படைகளை நிறைவேற்றுங்கள் பிறகு பெண்களுக்கான சட்டங்களை நிறைவேற்றலாம்” என்று கூறியுள்ளனர். ட்விட்டரில் பகிரப்பட்டு வரும் இது போன்ற கருத்துக்கள் தற்போது சர்ச்சைக்குக் காரணமாகியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து உலகமுழுவதிலுமிருக்கும் 70 ஆயிரம் ஆண்கள் இந்த ஹேஸ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.